
பிக் பாஸ் சீசன் 7 பங்கேற்பதை மறைமுகமாக உறுதி செய்துள்ளார் போட்டியாளர் ஒருவர்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் யாராவது சீசன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கோலாகலமாக நடந்து முடிந்தது தொடர்ந்து அக்டோபர் மாதத்தில் ஏழாவது சீசன் தொடங்கப்பட உள்ளது.

இதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு வீடு இடம் பெற போவதாக உலகநாயகன் கமல் ஹசன் அறிவித்திருந்தார். மேலும் போட்டியாளர்களாக யார் யார் பங்கேற்க போகிறார்கள் என தொடர்ந்து வெவ்வேறு விதமான லிஸ்டுகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

இந்த நிலையில் தற்போது விஜய் டிவி பிரபலமான குரோஷி பிக் பாஸ் சீசன் 7 போஸ்டர் அருகே எடுத்துக் கொண்ட போட்டோவை பதிவு செய்துள்ளார். இதனால் வரும் பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளர்களின் ஒருவராக பங்கேற்கிறார் என தகவல் பரவி வருகிறது. அதனை மறைமுகமாக உறுதி செய்யவே குரோஷி இந்த போட்டோவை வெளியிட்டுள்ளார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.