Web Ads

தனுஷ் நடித்த ‘குபேரா’ படம் கலெக்‌ஷன் விவரம்

தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் வெளியான ‘குபேரா’ பட கலெக்‌ஷன் பற்றிப் பார்ப்போம்..

‘குபேரா’ படம் இரண்டு நாட்களில் ரூ.50 கோடி வரை வசூலித்துள்ளது. மேலும், இன்று ஞாயிறு விடுமுறை என்பதால் கண்டிப்பாக இன்றைய வசூலும் அதிகமாக இருக்கும். படத்திற்கும் பாசிட்டிவான விமர்சனங்கள் இருப்பதால், இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் இப்படம் 100 கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வகையில், குபேரா படத்தின் மூலம் தனுஷ் புது சாதனையை நிகழ்த்த இருக்கின்றார். அதி வேகமாக 100 கோடி வசூலித்த படம் என்ற சாதனை இருந்தாலும், மறுபக்கம் அவர் நடித்த இரண்டு நேரடி தெலுங்கு படமும் 100 கோடி வசூலை பெற்ற படங்களாக அமையும்.

‘வாத்தி’ படத்தின் மூலம் நேரடியாக தெலுங்கு படத்தில் அறிமுகமானார் தனுஷ். அப்படம் 100 கோடி வசூலித்தது. அதைத்தொடர்ந்து தற்போது குபேரா திரைப்படமும் 100 கோடி வசூலை பெற இருக்கின்றது. எனவே, தெலுங்கிலும் தனுஷிற்கு தமிழைப் போல இரண்டே படங்களில் மிகப்பெரிய மார்க்கெட் உருவாகியுள்ளது.

இந்நிலையில், குபேரா படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், மூன்று மணி நேரம் ரன் டைம் இருந்தாலும், படத்தின் வசூல் குறையவில்லை. மேலும், படத்திற்கான புக்கிங் அமோகமாக இருப்பதால் இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் அதிகரிக்கும்.

குறிப்பாக தெலுங்கு ரசிகர்கள் ‘குபேரா’ திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர். தமிழை விட தெலுங்கில் ‘குபேரா’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகின்றது. குறிப்பாக தனுஷின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகின்றது.

கண்டிப்பாக இப்படத்திற்காக அவருக்கு தேசிய விருது கூட கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தன் திரைப் பயணத்தில் மேலும் ஒரு முக்கியமான தரமான படைப்பில் தனுஷ் நடித்திருக்கிறார் என பல பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் குபேரா ஐம்பது கோடி வசூலை கடந்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால், படக்குழு இதைப்பற்றி அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.