ஒரே நாளில் குட் பேட் அக்லி மற்றும் தக் லைஃப் படத்தை ஓரம் கட்டிய குபேரா.. முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

Web Ads

ஒரே நாள் வசூலில் குட் பேட் அக்லி மற்றும் தக் லைப் படத்தின் வசூலை முறியடித்துள்ளது குபேரா.

kuberaa movie collection update

kuberaa movie collection update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் மட்டுமில்லாமல் இயக்குனராகவும் கலக்கி வருகிறார். தற்போது இவரது நடிப்பில் குபேரா என்ற திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.

சேகர் கமுலா இயக்கத்திலும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் இயக்குனர் சேகர்
கமுலாவின் அமிக்கோஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்து உள்ளது.

மேலும் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் தெலுங்கில் முதல் நாளிலேயே 10 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக ஏற்கனவே வெளியான தக் லைஃப் மற்றும் குட் பேட் அட்லி திரைப்படங்கள் தெலுங்கில் செய்த முதல் நாள் வசூலை குபேரா தாண்டியுள்ளது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

kuberaa movie collection update

kuberaa movie collection update