ரசிகர்களின் ஃபேவரைட் நடிகை கீர்த்தி ஷெட்டியின் சிறு வயது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘உப்பனா’ திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் தான் கீர்த்தி ஷெட்டி. முதல் படத்திலேயே பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர் அடுத்ததாக ‘தி வாரியர்’ திரைப்படத்தில் நடித்து “புல்லட்டு பாடல்” மூலம் ரசிகர்களை ஆட்டம் போட வைத்தார்.

தற்போது சூர்யாவின் வணங்கான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் இவர் பிறமொழி படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். எப்போதும் சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வரும் கீர்த்தி ஷெட்டியின் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வரும். ஆனால் தற்போது சிறுவயதில் ஆள் அடையாளம் தெரியாமல் இருக்கும் கீர்த்தி ஷெட்டியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.