KPY பாலா நடிக்கும் புதிய படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?
KPY பாலா நடிக்கும் புதிய படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் பாலா. அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
இவரின் காமெடி திறமை ஒரு பக்கம் இருந்தாலும் சமூக சேவகராக பலர் நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு செய்து வருகிறார். இந்த நிலையில் இவர் தற்போது ஹீரோவாக வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்துள்ளார்.
தற்போது அவரது முதல் படமான காந்தி கண்ணாடி என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.இயக்குனர் ஷெரிப் இயக்கும் இந்த படத்தை ஆதிமூலம் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகி உள்ளது.அதாவது பாலா அவர்களின் instagram பக்கத்தில் செப்டம்பர் 5ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவித்து உள்ளார்.
இதனால் பலரும் பாலாவின் முதல் படத்தை பார்க்க ஆர்வத்தோடு இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
View this post on Instagram