மதராஸி மற்றும் காந்தி கண்ணாடி படங்கள், ஒரே நாளில் ரிலீஸ்..

Web Ads

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான ‘அமரன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, சிவகார்த்திகேயன் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ‘மதராஸி’ படத்திலும், சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி’ படத்திலும் நடித்து வருகிறார். இதில், மதராஸி படம் வரும் செப்டம்பர் 5-ந்தேதி திரைக்கு வரும் நிலையில், படம் குறித்த அப்டேட் வந்த வண்ணம் இருக்கிறது.

இந்நிலையில், கேபிஒய். பாலாவின் ‘காந்தி கண்ணாடி’ படமும் செப்டம்பர் 5-ந்தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான பாலா ஹீரோவாக அறிமுகமாகியிருக்கும் ‘காந்தி கண்ணாடி’ படத்தை ஷெரீஃப் இயக்கியுள்ளார். விவேக் மெர்வின் இசையமைத்துள்ளார்.

கேபிஒய்.பாலாவின் முதல் கனவுப் படமாக பார்க்கப்படும் இந்தப் படம், அவரது சினிமா வாழ்க்கையில் மிக முக்கியத்துவம் வாய்ந்த படமாக பார்க்கப்படுகிறது.

முன்னதாக ‘டிராகன்’ படமும், தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படமும் ஒரே நாளில் வெளியானது. இதில், டிராகன் படம் செம ஹிட்டானது நினைவுகூரத்தக்கது. பட்ஜெட் மற்றும் ஸ்டார் வேல்யூ முக்கியமல்ல, ஸ்கிரிப்ட் வொர்க் தானே முக்கியம். பொறுத்திருந்து பார்ப்போம்.

kpy bala debut movie gandhi kannadi clash with madharaasi
kpy bala debut movie gandhi kannadi clash with madharaasi