நீல்கிரீஸ் முருகன் தயாரிப்பில் வெங்க்கி ஏ.எல் இயக்கத்தில் ஜூனியர் பாலய்யா, பாக்கியராஜ், மனோ பாலா, கிர நாராயணன், நாகேந்திர பிரசாந், ஊர்வசி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கூத்தன்.

இப்படம் உலகம் முழுவதும் வரும் அக்டோபர் 11-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் ஜஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே இப்படத்தின் சிங்கிள் டிராக்கான கிங்கிஸ்தா மங்கிஸ்தா, டீஸர், ட்ரைலர் ஆகியவை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் குலுக்கல் முறையில் தங்க நாணயம் வழங்கப்படும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.