Web Ads

கேப்டன் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு..!

கேப்டன் மகனான சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

kombu seevi movie shooting wrapped
kombu seevi movie shooting wrapped

தமிழ் சினிமாவில் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் விஜயகாந்த். இவரது மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் படைத்தலைவன் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது.

அதனைத் தொடர்ந்து தற்போது இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் கொம்பு சீவி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் சரத்குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தற்போது இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது அதாவது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

kombu seevi movie shooting wrapped
kombu seevi movie shooting wrapped