
திருப்பதிக்கு சென்று மொட்டை போட்டுள்ளார் தமிழ் நடிகை ஒருவர்.
தமிழ் சினிமாவில் விசில் உள்ளிட்ட குறிப்பிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் காயத்ரி ரகுராம். நடிகை, டான்சர் என்று இல்லாமல் அரசியல் இன்னும் ஈடுபட்டு வரும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சர்ச்சைகளால் பாப்புலர் ஆனார்.
பாஜகவில் ஒரு முக்கிய பதவியில் இருந்து வந்த இவருக்கும் அண்ணாமலைக்கும் இடையே தகராறு ஏற்பட்டு தொடர்ந்து அண்ணாமலையை சாடி வருகிறார்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தற்போது திருப்பதி சென்று இவர் மொட்டை போட்டு அந்த புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
பொதுவாக சாதாரண பெண்கள் கூட மொட்டை அடிப்பதில் தயக்கம் காட்டுவார்கள். பிரபலங்களாக இருந்தால் மொட்டை அடிக்க வாய்ப்பே கிடையாது. அப்படி இருக்கையில் காயத்ரி ரகுராம் மொட்டை போட்டு அந்த புகைப்படத்தையும் தன்னுடைய சோசியல் மீடியாவில் வெளியிட இதை பார்த்து ரசிகர்கள் பலரும் உங்களுக்கு தில்லு ஜாஸ்தி தான் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.