டெஸ்ட் கிரிக்கெட் ஐசிசி தரவரிசையில் நமது இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலி முதல் இடத்தில் நீடிக்கிறார். முந்தய காலங்களில் நமது இந்திய வீரர்களின் பெயர்கள் தரவரிசை பட்டியலில் இடம் பிடிப்பதோடு சரி நீடித்து இருப்பது மிக கடினம்.
ஆனால் இப்போது இந்திய வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிக்காட்டி முதல் 10 இடங்களுக்குள் வந்து விடுகின்றனர். மேலும் விராட் முதல் இடத்திலேயே நீடித்து இருக்கிறார்.
முந்தைய மே.தீ-களுடனான போட்டியில் 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றதால் 116 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் நீடிக்கின்றது நமது இந்திய அணி. அடுத்த இரு இடங்களையும் தென்னாப்பிரிக்க மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் உள்ளன.