விஜய் ஆண்டனி நடிப்பில் தயாராகிக் கொண்டிருக்கும் “கொலை” படத்தின் திரில்லரான மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

விஜய் ஆண்டனி தற்போது நடித்துக் கொண்டிருக்கும் திரில்லரான படம் தான் “கொலை”. இப்படத்தை இயக்குனர் பாலாஜி குமார் இயக்குகிறார். இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ரித்திகா சிங் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களாக ராதிகா சரத்குமார், மீனாட்சி சவுத்ரி, முரளி சர்மா, அர்ஜுன், சிதம்பரம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இன்ஃபினிட்டி மற்றும் லோட்டஸ் ப்ரொடெக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருந்தது.

இந்நிலையில் நேற்றைய தினம் இப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு திரில்லரான வீடியோ மூலம் வெளியிட்டிருந்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகியதோடு மட்டுமின்றி ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியுள்ளது.

YouTube video