நடிகர் ரஜினிகாந்தின் கோச்சடையான் திரைப்படத்தின் பேக்ரவுண்ட் மியூசிக்கை தற்போது ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டு இருக்கிறார்.

இந்திய திரை உலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவரது நடிப்பில் 2014 ஆம் ஆண்டில் 3d அனிமேஷன் திரைப்படமாக வெளியான கோச்சடையான் திரைப்படம் குறித்த முக்கிய தகவலை இசை புயல் ஏ ஆர் ரகுமான் வெளியிட்டுள்ளார்.

அதாவது, சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து 3டி அனிமேஷனாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. ஆனால் இப்படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் இடம் பெற்றிருந்த பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில் இப்படத்தின் ஒரிஜினல் பேக்ரவுண்ட் மியூசிக்கை நீண்ட ஆண்டுகள் கழித்து இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இந்த சவுண்ட் டிரக் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.