கீழடி அகழாய்வு பணி தொடரவும், அருங்காட்சியகம் அமையவும், உத்தரவிட கோரி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் கனிமொழி என்பவரின் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அதில் தமிழக அரசின் பதில் மனுத்தாக்களில் கூறியிப்பதாவது, அதில் நான்காம் கட்ட அகழாய்வு பணி முடிவடைந்து உள்ளதாகவும், 7000க்கும் அதிகமான பழமையான பொருட்கள் கிடைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் முதலாக தங்க ஆபரணம் ஒன்று கிடைத்துள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த பொருட்களின் காலத்தை கணக்கிட அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்ததாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் 5 ஆம் கட்ட அகழாய்வு பணி மேற்கொள்ள மத்திய தொல்லியல் துறையில் அனுமதி கேட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கு 4வாரங்கள் ஒத்தி வைக்கபட்டுள்ளது.