Kushbhu

Khusbhu : விஸ்வாசம் படத்தின் ட்ரைலர் குறித்து பிரபல நடிகையான குஷ்பூ அதிரடியாக ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் தற்போது சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் விஸ்வாசம்.

சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நாயகியாக நடிக்க தம்பி ராமையா, விவேக், யோகி பாபு, கோவை சரளா, ரோபோ ஷங்கர் என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ட்ரைலர் கடந்த டிசம்பர் 30-ம் தேதி யூ ட்யூபில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றது.

இதுவரை யூ ட்யூபில் 17 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது.

திரையுலக பிரபலங்கள் பலரும் ட்ரைலர் குறித்து விமர்சனம் செய்து வரும் வேளையில் நடிகை குஷ்பூ தன்னுடைய கருத்தை பதிவிட்டுள்ளார்.

ட்ரைலரை பார்த்து வாயடைச்சு போயிட்டேன். தல படத்துக்கு விஸ்வாசமாக போகலாம். நயன்தாரா லுக் செம என ட்வீட் செய்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.