மீனாவின் கணவர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் குஷ்பு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் மீனா. தற்போது குணச்சித்திர நடிகையாக பல்வேறு படங்களில் நடித்து வரும் இவருக்கு வித்தியாசாகர் என்பவர் உடன் திருமணம் ஆகி நைனிகா என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது.

கொரோனாவால் உயிர் இழந்த மீனாவின் கணவர்.. குஷ்பு வைத்த கோரிக்கை - வைரலாகும் பதிவு

நைனிகா கூட தளபதி விஜய்யுடன் இணைந்து திரைப்படத்தில் அவருடைய மகளாக நடித்தார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இந்த நிலையில் மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரானாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் பலரும் மீனாவின் கணவரின் மரணம் குறித்து பல விதமான தகவல்களை பரப்பி வருகின்றனர். இந்த நிலையில் குஷ்பு காலையில் எழுந்ததும் இந்த தகவலை அறிந்து மிகவும் கவலையுடன் மீனாவின் குடும்பத்திற்கு கடவுள் வலிமை கொடுக்கட்டும் என பிரார்த்தனை செய்து இருந்தார். ‌

கொரோனாவால் உயிர் இழந்த மீனாவின் கணவர்.. குஷ்பு வைத்த கோரிக்கை - வைரலாகும் பதிவு

மேலும் அது மட்டுமல்லாமல் தயவுசெய்து மீனாவின் கணவர் குறித்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம். அவரை கொரானாவிற்கு பலி கொடுத்து விட்டோம் என கூறியுள்ளார். கொரோனா வைரஸ் அவருடைய நுரையீரல் இரண்டும் கடுமையாக பாதிக்கப்பட்டது தான் இதற்கு காரணம் என தெரிவித்துள்ளார்.