Web Ad 2

கென் கருணாஸ் இயக்கி நடிக்கும் ‘யூத்’ படத்தின் அப்டேட்ஸ்..

கருணாஸின் மகன் கென் கருணாஸின் படம் பற்றிப் பார்ப்போம்..

பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த கென் கருணாஸ், சில மாதங்களுக்கு முன்பு தானே இயக்கி, நாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை தொடங்கினார். இதன் படப்பிடிப்பு ஒரே கட்டமாக முடிக்கப்பட்டு, இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

தற்போது இப்படத்துக்கு ‘யூத்’ எனப் பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கு திரையுலகினர் பலரும் கென் கருணாஸுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இப்படம் பிப்ரவரியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் ட்ரெய்லர் மற்றும் பாடல்களை வெளியிட்டு விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கவுள்ளது படக்குழு.

இதில் சுராஜ் வெஞ்சுரமுடு, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதற்கு ஒளிப்பதிவாளராக விக்கி, எடிட்டராக நாஷ், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். முன்னதாக விஜய் நடிப்பில் ‘யூத்’ படம் வெளியாகி வரவேற்பு பெற்றது நினைவுகூரத்தக்கது.

ken karunas directed in youth movie updates
ken karunas directed in youth movie updates