நடிகை கீர்த்தி சுரேஷ் தனது செல்லப்பிராணியான நாய்க்குட்டிக்கு இன்ஸ்டாகிராமில் தனியாக அக்கௌன்ட் கிரியேட் செய்து அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

தென்னிந்திய திரை உலகில் பிரபல நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் தற்பொழுது தமிழில் உதயநிதிக்கு ஜோடியாக ‘மாமன்னன்’ திரைப்படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து தெலுங்கில் தல அஜித்தின் வேதாளம் படத்தின் ரீமேக்கில் உருவாகும் ‘போல ஷங்கர்’ என்கின்ற படத்தில் சிரஞ்சீவி அவர்களுக்கு தங்கையாக நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி நானியுடன் இணைந்து ‘தசரா’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இப்படி பல மொழிகளில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் இதற்கு இடையில் அவ்வப்போது விதவிதமாக போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து அதிக பின்தொடர்பாளர்களை பெற்றிருக்கிறார்.

அதேபோல் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது செல்லப்பிராணியான நைக்கியின் பெயரில் தனியாக இன்ஸ்டாகிராமில் அக்கவுண்ட் ஒன்றை கிரியேட் செய்திருக்கிறார். அதனையும் 40 ஆயிரம் பேர் பாலோ செய்து அந்த நாய்க்குட்டியின் புகைப்படங்களுக்கு லைக் மற்றும் கமெண்ட்களை ஷேர் செய்து வருகின்றனர். இப்படி புதுமையாக நடிகை கீர்த்தி சுரேஷ் செய்துள்ள செயலை பார்த்து அனைவரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.