தளபதி விஜயுடனான வாய்ப்பை ஒரு முறை தான் தவற விட்டதாக நடிகை கீர்த்தி சுரேஷ் சர்கார் இசை வெளியீட்டு விழாவில் கூறியுள்ளார்.

நேற்று சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த விழாவில் படத்தின் நாயகியான கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டு பேசிய போது தான் விஜயுடன் சேர்ந்து நடிக்க கிடைத்த வாய்ப்பை தவற விட்டேன் என கூறியுள்ளார்.

மேலும் அந்த வாய்ப்பை தவற விட்டது இப்படி சர்கார் படத்தில் இணைந்து நடிப்பதற்காக தான் என்பது இப்போது புரிகிறது என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். பைரவா படத்திற்கு பிறகு கீர்த்தி சுரேஷ் விஜயுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.