கீர்த்தி சுரேஷ் பதிவிட்ட இன்ஸ்டா பதிவிற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்துள்ளனர்.

தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஏராளமான ரசிகர்களைக் கொண்டு கலக்கி கொண்டிருக்கும் இவர் தெலுங்கில் வெளியான தசரா திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து தமிழில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி இருக்கும் மாவீரன் திரைப்படத்தின் வெளியீட்டிற்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

மேலும் தெலுங்கில் போலா ஷங்கர், தமிழில் ரகு தாத்தா உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் அவர் எப்போதும் சமூக வலைத்தள பகுதிகளிலும் ஆக்டிவாக இருந்து ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து வருவார். அந்த வகையில் கீர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாம்பழம் ஒன்றை ரசித்து சாப்பிடும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவுக்கு ரசிகர்கள் ஒரு மணி நேரத்தில் 3 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகள் குவித்துள்ளனர். அதன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.