பாய் பிரண்டுடன் நடிகை கீர்த்தி சுரேஷ் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழ் தெலுங்கு மலையாளம் என மூன்று மொழி படங்களிலும் பிஸியாக நடித்து வரும் இவர் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

அது மட்டுமல்லாமல் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக கீர்த்தி சுரேஷ் தொழிலதிபரான ஃபர்ஹான் பின் லியாகத் என்பவரை காதலித்து வருவதாகவும் இருவரும் பணி பருவ நண்பர்கள் எனவும் தகவல் பரவியது.

இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் அவருடைய நண்பருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் இவர் தான் கீர்த்தியை கல்யாணம் செய்து கொள்ள போகும் மாப்பிள்ளையா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.