மேக்கப் இல்லாமல் பக்கா கிராமத்து பெண்ணாக மாறியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் இறுதியாக சானி காகிதம் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகின. தமிழில் ரஜினிக்கு தங்கையாக அண்ணாத்த படத்தில் நடித்ததை தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவில் பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார்.

மற்ற மொழிகளான தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் கவனம் செலுத்தி வரும் இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அதே சமயம் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேக்கப் இல்லாமல் பார்க்க கிராமத்து பெண் லுக்கில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தனது கையில் ஒரு குருவியை வைத்துக்கொண்டு தனது கோ ஸ்டார் என குறிப்பிட்டு இந்த போட்டோவை வெளியிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/CpPjvjwhwUz/?igshid=YmMyMTA2M2Y=