பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கடைசி நாள் ஷூட்டிங் என காவியா அறிவுமணி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். நான்கு அண்ணன் தங்கைகளின் பாசத்தை அடிப்படையாகக் கொண்டு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் ஒவ்வொரு ஜோடிக்கும் தனித்தனியாக ரசிகர் பட்டாளம் இருந்து வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முல்லையாக கடைசி நாள் சூட்டிங்... காவியா அறிவு மணி வெளியிட்ட புகைப்படம்.!!

அதிலும் குறிப்பாக கதிர் முல்லை ஜோடிக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் இருக்கின்றனர். முல்லை என்ற கதாபாத்திரத்தில் விஜே சித்ரா நடித்து வந்த நிலையில் அவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு அடுத்ததாக நடிகை காவியா அறிவுமணி இந்த கதாபாத்திரத்தை ஏற்று இவ்வளவு நாள் நடித்து வந்தார்.

தற்போது வெள்ளித்திரையில் கிடைத்த நாயகி வாய்ப்பு காரணமாக இந்த சீரியலில் இருந்து காவியாவும் விலகிக் கொண்டுள்ளார். தற்போது இன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக கடைசி நாள் சூட்டிங் என புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முல்லையாக கடைசி நாள் சூட்டிங்... காவியா அறிவு மணி வெளியிட்ட புகைப்படம்.!!

இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இனி வரும் நாட்களில் முல்லையாக சிப்பிக்குள் முத்து லாவண்யா நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.