கட்டா குஸ்தி படம் எப்படி இருக்கு? என்பது குறித்த விமர்சனங்களை பார்க்கலாம் வாங்க.

இயக்குனர் செல்ல அய்யாவு விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லெட்சுமி, கருணாஸ், முனிஷ்காந்த் உட்பட பலரது நடிப்பில் வெளியான திரைப்படம் கட்டா குஸ்தி. இந்த படத்தை விஷ்ணு விஷால் மற்றும் ரவி தேஜா இணைந்து தயாரிக்க உதயநிதி ரிலீஸ் செய்துள்ளார்.

வயிறு குலுங்க சிரிக்க வைக்குதா? கடுப்பாக்குதா? கட்டா குஸ்தி விமர்சனம்.!!

படத்தின் கதைக்களம் :

சிறுவயதில் பெற்றோரை இழந்த விஷ்ணு விஷாலுக்கு ஊர் தலைவரான கருணாஸ் தான் ஒரே உறவு. கருணாஸ் பெண்களை எப்பவும் நமக்கு கீழவே வைத்து கொள்ள வேண்டும் என்ற மனப்பான்மையுடன் இருக்க அதை விஷ்ணு விஷாலுக்கும் சொல்லி தர அவர் பல கண்டிஷன்களுடன் பெண் தேடுகிறார்.

இந்த பக்கம் கட்டா குஸ்தி வீராங்கனையும் தைரியமான பெண்ணுமான ஐஸ்வர்யா லெட்சுமி குடும்பத்தார் மாப்பிள்ளை கிடைக்காமல் புலம்பி கொண்டிருக்க ஐஸ்வர்யாவின் மாமா முனிஷ்காந்த் உண்மைகளை மறைத்து விஷ்ணு விஷாலுக்கு கட்டிக் கொடுக்கிறார்.

அதன் பிறகு விஷ்ணு விஷாலுக்கு உண்மைகள் தெரிய வர அடுத்து நடந்தது என்ன? இருவரும் சேர்ந்து வாழ்ந்தார்களா? இல்லையா என்பது தான் இந்த படத்தின் கதைக்களம்.

வயிறு குலுங்க சிரிக்க வைக்குதா? கடுப்பாக்குதா? கட்டா குஸ்தி விமர்சனம்.!!

படத்தை பற்றிய அலசல் :

விஷ்ணு விஷால், முனிஷ்காந்த், கருணாஸ், ஐஸ்வர்யா லெட்சுமி என அனைவரும் நடிப்பால் கவனம் ஈர்க்கின்றனர்.

ஐஸ்வர்யா லெட்சுமி ஆக்ஷனில் அதிரடி காட்டியுள்ளார்.

ஜஸ்டின் பிரபாகரன் பின்னணி இசை பலம் சேர்க்கிறது. பாடல்கள் சுமார் ரகம்.

ஒளிப்பதிவு காட்சிகளுக்கு உயிர் கொடுக்க எடிட்டிங் கனகச்சிதம்.

இயக்குனர் செல்ல அய்யாவு படத்தை காமெடியாக கொண்டு சென்று கடைசியில் சிந்திக்க வைத்துள்ளார்.

தம்ப்ஸ் அப் :

1. விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லெட்சுமி, கருணாஸ், முனீஷ்காந்த் நடிப்பு.

2. காமெடி காட்சிகள்

3. கடைசியில் சொன்ன மெசேஜ்

தம்ப்ஸ் டவுன் :

1. முதல் பாதியில் அளவுக்கு அதிகமான காமெடி

2. வழக்கமான சில லாஜிக்கல் தவறுகள்