Kasthuri

ட்விட்டரில் கஸ்தூரி தன்னை படுக்கைக்கு அழைத்ததாக பதிவிட்ட ரசிகருக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார் நடிகை கஸ்தூரி.

சமூகவலைதளங்களில் Me Too பற்றிய பேச்சுதான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தமிழ் திரை உலகிலும் உள்ள நடிகைகள் பலர் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் பற்றி பேசி வருகின்றனர்.

பாடகி சின்மயியும் ட்விட்டரில் பல்வேறு டிவீட்களை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் இதற்கு நடிகை கஸ்தூரியும் ஆதரவு தெரிவிப்பது போல ட்வீட் ஒன்றை பதிவு செய்திருந்தார்.

இதனையடுத்து ரஜினி ரசிகர் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் என்னை கஸ்தூரி ஹோட்டல் ரூமிற்கு கூப்பிட்டு என்னிடம் தவறாக நடந்து கொண்டால் ரூபாய் ஒரு லட்சம் தருவதாக கூறி இருந்தார் ஆனால் நான் முடியாது என்று கூறிவிட்டேன் என்று பதிவிட்டு இருந்தார்.

இதற்கு கஸ்தூரி தற்போது பதிலடி கொடுக்கும் வகையில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவில் அட பொய் சொல்லும்போது கூட உண்மையை உளறிட்டான் பாருங்க. அவனால முடியாது தான் முடியாதவன் முடியாதுனு தானே சொல்லி ஆகணும். இப்படி ரஜினி பெயரை கெடுக்க எத்தனை பேர் இருக்காங்களோ என பதிவிட்டுள்ளார்.

இந்த டீவீட்டை பார்த்த ரசிகர், சாரி மேடம் மீ டூ-வை கலாய்ச்சேன். எனக்கு உங்களுடைய படங்களை மிகவும் பிடிக்கும் என கூறி மன்னிப்பு கேட்டுள்ளார்.

https://platform.twitter.com/widgets.js