Kasturi Controversy

Kasthuri Controversy : மீண்டும் அஜித் ரசிகர்களை பற்றி நடிகை கஸ்தூரி மோசமாக ட்வீட் செய்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் கஸ்தூரி. இவர் தற்போது சமூக வளையதள பக்கமான ட்விட்டரில் எதையாவது பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

சமீபத்தில் கூட அஜித், விஜய், கமல், ரஜினி என அனைத்து நடிகர்களை வம்பிழுத்து ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறார்.

இதனால் தல ரசிகர் ஒருவர் உங்களுக்கு அஜித்தை பற்றி பேச தகுதியில்லை. பேசவும் கூடாது.

கிண்டி லாட்ஜ்-ல உங்கள பார்க்க நிறைய ஆண்கள் வந்தாங்க. என்னனு விசாரிச்சா நீங்க தான் விருந்துனு சொன்னாங்க என ட்வீட் செய்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த நடிகை கஸ்தூரி அந்த ட்விட்டர் கணக்கு விபரங்களை வெளியிட்டு அஜித்தின் மேனேஜருக்கு டேக் செய்து அந்த நபரின் விபரத்தை கேட்டுள்ளார்.

மேலும் அவரது டீவீட்டில் மானம் ரோஷமுள்ள அஜித் ரசிகர்களுக்கு அன்பான வேண்டுகோள்.

இந்த கூமுட்டையின் விவரம் அறிந்தவர்கள் என்னை தொடர்பு கொள்ளவும் எனவும் #dirtyAjithFans எனவும் டீவீட்டியுள்ளார்.

இதனால் அஜித் ரசிகர்கள் விமர்சிப்பதாக இருந்தாலும் சம்மந்தப்பட்ட ரசிகரை மட்டும் விமர்சியுங்கள், ஒட்டு மொத்தமாக தவறாக கூறாதீர்கள் என சண்டையிட்டு வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.