Karunanidhi statue unveiling
Karunanidhi statue unveiling

Karunanidhi statue unveiling – ‘திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுத்து, திமுக தலைவர் ஸ்டாலின் இன்று பல கட்சித் தலைவர்களை டெல்லியில் சந்திக்க இருக்கிறார்’ .

சென்னை அண்ணா அறிவாலயத்தில் அண்ணா மற்றும் கருணாநிதி சிலை வரும் 16-ம் தேதி திறக்கப்பட உள்ளது.

அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதிக்கு பிரமாண்டமான முழு உருவ சிலை அமைக்கப்பட உள்ளது.

மேலும் மிக பிரமாண்டமான தி.மு.க. கொடி கம்பம் ஒன்றும் அங்கு நிறுவப்பட உள்ளது. இதற்காக ஸ்டாலின் பல அரசியல் தலைவர்களை சந்தித்து அழைப்பிதழ் வழங்கி வருகிறார்.

மேலும், இன்று டெல்லியில் பாஜகவின் எதிர்க்கட்சிகள் மாபெரும் கூட்டத்தை நடத்த உள்ளது. 2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் இந்த கூட்டத்தை நடத்த உள்ளது.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் டெல்லி சென்று இருக்கிறார்.

மேலும், இந்த கூட்டத்தில், திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி சிலை திறப்பு விழா தொடர்பாக ஸ்டாலின் பல அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து அழைப்பு விடுக்க உள்ளார்.

இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் நேற்றே காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து இந்த விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, இன்று அவர் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆகிய தலைவர்களை சந்திக்க உள்ளார்.

ஆனால் ஸ்டாலின் பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்களை இந்த விழாவிற்கு அழைப்பாரா என்று தகவல் வெளியாகவில்லை; இதனால் தொண்டர்களிடையே சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.