தளபதி விஜய் நடித்து வரும் சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த அக்டோபர் 2-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விஜய் பேசும் போது தன்னுடைய ரசிகர்களுக்கு பன்ச் டைலாக்குடன் ஒரு குட்டி கதையை கூறினார்.

இதனையடுத்து காமெடி நடிகர் நீங்க சொன்ன இந்த குட்டி கதை அரசியல்வாதிகளுக்கு மட்டும் தானா? இல்லை உங்களது ரசிகர்களுக்குமா என ட்விட்டரில் கேள்வி எழுப்பி இருந்தார்.

பின்னர் இந்த டீவீட்டால் கருணாகரனுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையே மிக பெரிய வாக்குவாதமே நடந்து வந்தது. ஒரு கட்டத்தில் கருணாகரன் விஜய் ரசிகர்களை சர்கார் அடிமைகளே என கூற கோபமடைந்த ரசிகர்கள் அவருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் தயார் செய்து வெளியிட்டு இருந்தனர்.

அதுமட்டுமில்லாமல் கருணாகரனுக்கு தொலைபேசி, சமூக வளையதளங்களின் மூலமாக விஜய் ரசிகர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் கருணாகரன் சமீபத்தில் இது குறித்து போலீசில் புகாரளிக்க சென்றிருந்தார்.

அப்போது காவல் ஆணையர் அவர்கள் புகார் அளிக்க வேண்டுமென்றால் உங்களுக்கு ஆபாசமாக வந்த மெசேஜ், போன் கால் நம்பர்கள், மெசேஜ் ஸ்க்ரீன் ஷாட்ஸ் ஆகியவைகளை காபியாக எடுத்து கொடுங்கள் என கூறியுள்ளார்.

இதனால் கருணாகரன் இவைகளை சமர்பிக்க இரண்டு நாள் அவகாசம் கேட்டு விட்டு வீடு திரும்பியதாக கூறப்படுகிறது. இரண்டு நாள் கழித்து புகார் அளிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.