விருமன் படத்தின் பாடல் ஒன்றை குறிப்பிட்டு நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

கொம்பன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கார்த்தி இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடித்திருக்கும் திரைப்படம் தான் விருமன். இப்படம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை திரையரங்கில் வெளியானது. இதில் அதிதி சங்கர், ராஜ்கிரண், சூரி, பிரகாஷ் ராஜ் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

கிராமத்து செண்டிமெண்ட் உடன் குடும்ப கதையாக உருவாகி இருக்கும் இப்படம் ரசிகர்களின் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி இருக்கும் இப்படத்தின் பாடலான வானம் கிடுக்கிடுங்க வீடியோ பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இதை தற்போது கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கூறியுள்ளதாவது, நடுராத்திரி மூணு மணிக்கு எல்லாம் சம்மர்சால்ட் அடிக்கவுட்டியே சாண்டி மாஸ்டர். மன்னிக்கவே மாட்டேன். இதற்கு முன்பாக இது போல் நான் செய்ததில்லை. இனி எல்லா ஊர் திருவிழாலையும் நம்ம பாட்டு கண்டிப்பா இருக்கும் என கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.