
நான் மகான் அல்ல படத்தை மிஸ் செய்து விட்டதாக பிரபல நடிகர் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தி, காஜல் அகர்வால் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் வெற்றி பெற்ற திரைப்படம் நான் மகான் அல்ல.
சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது நான் தான் என கூறி ஷாக் கொடுத்துள்ளார் விஷ்ணு விஷால்.
சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் தான் நான் மகான் அல்ல படத்திலும் நடிக்க இருந்துள்ளார்.
தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த பட வாய்ப்பை தவற விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தில் நடித்திருந்தால் தனது கேரியர் வேறு விதமாக இருந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.