நயன்தாரா குறித்து சர்ச்சையை கிளப்பிய கரண் ஜோஹர் தற்போது விளக்கம் அளித்து அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகரும் இயக்குனருமான கரண் ஜோஹர் “காபி வித் கரண் ” என்ற நிகழ்ச்சியின் ஏழாவது சீசனை நடத்தி வருகிறார். அதில் மூன்றாவது எபிசோடிருக்கு சமந்தா மற்றும் அக்ஷய் குமார் இருவரும் கலந்து கொண்டனர்.

அப்போது அதில் கலந்து கொண்ட சமந்தாவிடம் கரண் ஜோஹர், ”தென்னிந்திய சினிமாவில் யார் முன்னணி நடிகை ?’ என்று நினைக்கிறீர்கள்? என்ற கேள்வியை கேட்டுள்ளார். அதற்கு நயன்தாரா குறித்து பதில் அளித்த சமந்தா விடம் தொகுப்பாளர் கரண் ஜோஹர், ‘என் லிஸ்டில் அப்படி இல்லையே?’ என்று கூறிவிட்டு ஓர்மேக்ஸ் மீடியா கருத்துக்கணிப்பில் சமந்தாதான் நம்பர் ஒன் நடிகை என்று இருப்பதைக் குறிப்பிட்டிருக்கிறார்.

இவரது இந்த பதில் சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில் இந்த சர்ச்சைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் கரண் ஜோகர். அதில் அவர் ஆர்மி நிறுவனத்தின் பட்டியலில் தென் இந்திய சினிமாவில் நம்பர் ஒன் நடிகை என்பதில் சமந்தாவின் பெயர் தான் உள்ளது என குறிப்பிட்டேன். அது என்னுடைய தனிப்பட்ட கருத்து அல்ல என்று விளக்கம் கொடுத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.