காந்தாரா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கன்னட மொழியில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்திருந்த திரைப்படம் தான் காந்தாரா. விஜய் கிராகந்தூர் தயாரிப்பில் பி. அஜெனீஷ் லோக்நாத் இசையமைப்பில் உருவாகி இருந்த இப்படத்தில் ரிஷப் செட்டியுடன் இணைந்துகிஷோர், அச்யுத் குமார், பிரமோத் ஷெட்டி மற்றும் நடிகை சப்தமி கவுடா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்த இப்படம் கன்னட மொழியில் மட்டும் 150.ரூ கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. மேலும் இப்படம் கன்னட மொழியில் மட்டுமின்றி தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியிடப்பட்டு ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்து மாபெரும் வெற்றியை பெற்றிருந்தது.

தற்போது இப்படம் அமேசான் பிரைம் OTT தளத்திலும் வெளியாகி பட்டையை கிளப்பி வரும் நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான முதற்கட்ட பணிகளில் இயக்குனர் இறங்கியுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இது தொடர்பான அதிகாரம் பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.