பிரபல நடிகர் உடன் தமிழும் சரஸ்வதியும் மேக்னாவுக்கு நிச்சயம் நடைபெற்றுள்ளது.
Kannana Kanne Akshita Engagement Photos : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான அழகு சுமங்கலி ஒலித்த சீரியல்களில் நடித்து அதன் பிறகு கண்ணான கண்ணே என்ற சீரியலில் ஹீரோயினுக்கு தங்கையாக நடித்து மிகவும் பாப்புலரானவர் அக்ஷிதா.
இந்த சீரியல் முடிவுக்கு வந்ததும் ஜீ தமிழில் சீதாராமன் சீரியலில் நடித்தார். பிறகு தமிழும் சரஸ்வதியும் சீரியலில் மேக்னா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால் தற்போது இரண்டு சீரியலிலும் இவரை காண முடியவில்லை.
இந்த நிலையில் பிரபல நடிகருடன் நிச்சயம் நடந்து முடிந்த புகைப்படங்களை வெளியிட்டு தனக்கு நிச்சயம் முடிந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இவருடைய வருங்கால கணவர் வேறு யாருமில்லை பெங்களூருவை சேர்ந்த பிரபல நடிகர் ப்ரீத்தம் சுரேஷ் தான் என்பதும் தெரிய வந்துள்ளது.
இவர் வெளியிட்டுள்ள நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.