கங்குவா படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியான சூர்யாவின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முக்கியமான டாப் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

3டி தொழில்நுட்பத்தில் பத்து மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கொடைக்கானலில் நடைபெற்று வந்த நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் சூர்யாவின் புகைப்படத்துடன் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதன்படி, கொடைக்கானலில் நடைபெற்று வந்த கங்குவா திரைப்படத்தின் வரலாற்று பகுதிக்கான படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாகவும், அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் புதிய தகவலுடன் படப்பிடிப்பு தளத்தில் அசிஸ்டன்ட் ஸ்டண்ட் கொரியாகிராஃபருடன் கங்குவா கெட்டபில் இருக்கும் சூர்யாவின் புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.