கனா சீரியலில் புதிய அன்பரசியாக நடிக்க போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கனா. பிரிந்து கிடக்கும் அப்பா மகள் எப்படி ஒன்று சேர்க்கிறார்கள்? ஓட்ட பந்தய போட்டியில் தடைகளை தாண்டி நாயகி எப்படி சந்திக்கிறாள் என்பது தான் இந்த சீரியலின் கதைக்களம்.
இந்த சீரியலில் நாயகியாக தர்ஷனா அன்பரசி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். உன்னி கிருஷ்ணன் நாயகனாக நடிக்க மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அன்பரசியாக நடித்து வரும் தர்ஷனா திருமணம் காரணமாக இந்த சீரியலில் இருந்து வெளியேற போவதாக ஏற்கனவே தகவல் பரவிய நிலையில் தற்போது வெளியேறி விட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
மேலும் அவருக்கு பதிலாக தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமான டோனிஷா என்பவர் நடிக்க இருப்பதாக தெரிய வந்துள்ளது. நாளை அல்லது நாளை மறுநாள் முதல் இவரது காட்சிகள் இடம்பெறும் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
இவர்கள் தெலுங்குவில் ஹிட்லர் காரி பெல்லம் என்ற சீரியலிலும் மலையாளத்தில் பலுங்கு என்ற சீரியலிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.