Kanaa Movie

Kanaa Movie : முதல் பாலே சிக்ஸர் தான் என கனா படத்தை பார்த்து பிரபல முன்னணி இயக்குனர் பாராட்டியுள்ளார். அந்த ட்வீட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பாடலாசிரியரும் பாடகருமாகவும் வலம் வருபவர் அருண் ராஜ் காமராஜா.

இவர் தற்போது சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், சிவகார்த்திகேயன் நடிப்பில் கனா என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படம் நாளை முதல் உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது. மேலும் படத்தின் சிறப்பு காட்சி ஒன்று திரையுலக பிரபலன்களுக்காக திரையிடப்பட்டு இருந்தது.

இந்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் பார்த்து படத்தை பற்றி ட்வீட் செய்து பாராட்டியுள்ளார்.

மேலும் அதில் முதல் பாலே சிக்ஸர் தான் என அருண்ராஜ் காமராஜாவை புகழ்ந்து தள்ளியுள்ளார்.