உலக நாயகன் கமல்ஹாசன் பாடகி சின்மயிக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார். பாடகியான சின்மயி கடந்த சில தினங்களாகவே ட்விட்டர் பக்கத்தில் திரையுலக பிரபலங்களின் பாலியல் தொந்தரவுகளை பட்டியலிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

சின்மயியை தொடர்ந்து பலரும் மீ டூ என்ற ஹேஸ்டேக்கில் தங்களுக்கு நேர்ந்த பாலியல் இன்னல்களை பற்றி கூறி வருகின்றனர்.

சின்மயிக்கு திரையுலக பிரபலங்கள், நடிகைகள், நடிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது முழு நேர அரசியலில் இறங்கியுள்ள கமல்ஹாசன் இந்த விவகாரத்தில் சின்மயிக்கு தன் ஆதரவை தெரிவித்துள்ளார்.

ஆனால் பெண்கள் மீ டூ-வில் நியாயமான உண்மையான குற்றசாட்டுகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Breaking Singer Chinmayi Released Shocking Video | #Chinmayi #Vairamuthu #MeTooControversy