நடிகர் கமல்ஹாசன் குடியரசு தினத்தை முன்னிட்டு பகிர்ந்திருக்கும் வாழ்த்து வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் உலகநாயகனாகவும் ஆண்டவர் என்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவர் தற்போது விக்ரம் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் சமூக வலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகர் கமல்ஹாசன் தற்போது குடியரசு தினத்தை முன்னிட்டு ரசிகர்களுக்கு அவரது பாணியில் அனைவருக்கும் வாழ்த்துக்களை பதிவிட்டிருக்கிறார்.

குடியரசு தினத்தை முன்னிட்டு… நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டு இருக்கும் பதிவு வைரல்.!

அதில் அவர், ஒவ்வொரு மனிதரும் சமமாக நடத்தப்படும்போதுதான் குடியரசு அதன் முழுமையான அர்த்தத்தை எட்டுகிறது. நாட்டின் இறையாண்மை குடிமக்களிடமே நிலைகொண்டுள்ளது என்பதை உணர்த்திய முன்னோடிகளை வணங்கி சமூக ஏற்றத்தாழ்வுகளைக் களைய உறுதி ஏற்போம். குடியரசு தின நல்வாழ்த்துகள் என்று குறிப்பிட்டிருக்கிறார். அது தற்போது ரசிகர்களின் இடையே வைரலாகி வருகிறது.