ஃபாரின் பெண்களுடன் போட்டோ ஷூட் செய்திருக்கும் கமல்ஹாசனின் ரீசன்ட் கிளிக்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரை உலகில் தவிர்க்க முடியாத மாபெரும் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவர் தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பாபி சிம்ஹா பிரியா பவானி சங்கர், சித்தார்த் உள்ளிட்ட பல உச்ச நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

தற்போது இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு சென்னையில் மும்பரமாக நடைபெற்று வரும் நிலையில் அவ்வப்போது நடிகர் கமல்ஹாசன் செய்யும் போட்டோ ஷூட் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில் ஃபாரின் பெண்களுடன் கொளுத்தும் வெயிலில் எனர்ஜித்துக்காக செய்திருக்கும் கமல்ஹாசனின் ரீசென்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.