நடிகர் கமல்ஹாசனின் ரீசன்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்திய திரை உலகில் முக்கிய நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் கமல்ஹாசன். மாபெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவர் தற்போது விக்ரம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அனிருத் இசையமைப்பில் பல முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் நடிகர் கமல்ஹாசன் தெலுங்கில் டாப் ஹீரோவாக விளங்கும் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் ‘ப்ராஜெக்ட் கே’ திரைப்படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இது குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பினை அப்பாடக்குழு ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் தற்போது இப்படத்திற்காக நடிகர் கமல்ஹாசன் அமெரிக்கா சென்று இருக்கிறார். அங்குள்ள தெருவில் தனியாக நடந்து வரும் அவரது ரிசென்ட் போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஷேர் செய்யப்பட்டு ட்ரெண்டிங்காகி வருகிறது.