மீண்டும் நடிகர் கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு திரைப்படம் திரைக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய திரையுலகில் உலக நாயகனாக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவர் விக்ரம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்றிருந்த ‘வேட்டையாடு விளையாடு’ திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆக இருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதாவது, கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி இருந்த இப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் டிஜிபி ராகவன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் மிரட்டி இருப்பார். இதில் அவருடன் இணைந்து ஜோதிகா, கமலினி முக்கர்ஜி, பிரகாஷ் ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் உருவாகியிருந்த இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் தற்போது வரை ரசிகர்களை ரசிக்க வைத்து வரும் நிலையில் இப்படம் புது பொலிவுடன் வரும் ஜூன் 23ஆம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆக இருப்பதாக கூறப்படுவதோடு இதன் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.