
Kamal Haasan Last Movie : என்னுடைய கடைசி படம் இதுவே.. இனி நடிக்க போவதில்லை என கமல்ஹாசன் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த போது கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் மிக பெரிய ஜாம்புவான் நடிகர் கமல்ஹாசன். இவருக்கு மிக பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
தமிழ் சினிமாவில் பல புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வந்தவர் கமல்ஹாசன் தான் என்றால் மிகையாகாது.
இவர் ஷங்கர் இயக்கத்தில் உருவாக உள்ள இந்தியன் 2 படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் வரும் டிசம்பர் 14-ம் தேதி தொடங்க உள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து சூர்யாவுடன் இணைந்து தேவர் மகன் 2 படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
ஆனால், இன்று கொச்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் என்னுடைய நடிப்பில் வெளியாகும் கடைசி திரைப்படம் இந்தியன் 2 தான் என கூறியுள்ளார்.
அதன் பின்னர் முழு நேர அரசியல் தான்.. ஆனால் என்னுடைய தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்து படங்களை தயாரிக்கும் எனவும் கூறியுள்ளார்.
சூர்யாவுடன் இணைந்து தேவர் மகன் 2 உருவாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் இந்தியன் 2 படமே என்னுடைய கடைசி படம் என அறிவித்திருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.