தளபதி 67 படத்தில் கமல்ஹாசன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக வாரிசு என்ற திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி உள்ள இந்த திரைப்படத்தினை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளார்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ள நிலையில் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதுமட்டுமல்லாமல் தளபதி 67 படத்தில் விக்ரம் பட கமல் கேரக்டர் இடம்பெற இருப்பதாகவும் இதனால் கமல் இப்படத்தில் கெஸ்ட் ரோலில் வருவார் எனவும் தகவல்கள் வெளியாகி ரசிகர்களை குஷியாக்கி உள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.