ஜெய் பீம் படம் பார்த்து அந்த படம் பற்றிய விமர்சனத்தை பதிவு செய்துள்ளார் உலகநாயகன் கமல்ஹாசன்.

KamalHaasan About JaiBhim Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் இன்று அமேசான் பிரைம் வீடியோ வழியாக ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ள திரைப்படம் ஜெய் பீம். ஞானவேல் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்தப் படத்தில் சூர்யா வழக்கறிஞராக நடித்துள்ளார்.

தீபாவளி சிறப்பு ரயில்கள் : டிக்கெட் கட்டணம் உயர்வு

இருளர் இன மக்களின் வாழ்க்கைக்காக போராடுபவராக நடிகர் சூர்யா நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது படத்தைப் பார்த்து தன்னுடைய விமர்சனத்தை பதிவு செய்துள்ளார் உலகநாயகன் கமல்ஹாசன்.

Vani Bhojan எப்பவும் சிரிச்சுட்டே இருப்பாங்க! – Actor Vikram Prabhu SPeech | Paayum Oli Nee Enakku

இது குறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளதாவது, #JaiBhim பார்த்தேன். கண்கள் குளமானது. பழங்குடியினரின் இன்னல்களை அழுத்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் ஞானவேல். பொதுச் சமூகத்தின் மனசாட்சிக்குக் குரலற்றவர்களின் குமுறல்களைக் கொண்டு சேர்த்த சூர்யா , ஜோதிகா மற்றும் படக்குழுவினருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் என தெரிவித்துள்ளார்.

உலகநாயகன் கமல்ஹாசனின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.