நானும் சிம்புவும் 3 வயதிலிருத்து “இதை” அனுபவிக்கிறோம்: கமல் பேச்சு வைரல்..

Web Ads

தனிமனித சுதந்திரம் விலைமதிப்பற்றது. சுகமானது. ஆனால், இந்நிகழ்வு பிரபலங்களுக்கு கிடைக்கிறதா? என்றால் இல்லைதானே. இது குறித்து கமல்ஹாசன் தெரிவித்த கருத்துகள் காண்போம்..

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அசோக் செல்வன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் ‘தக் லைஃப்’ படத்தை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துள்ளனர்.

‘நாயகன்’ படத்திற்கு பிறகு இணைந்துள்ளனர் மணிரத்னம்-கமல். மேலும்,
முதன்முறையாக கமலுடன் சிம்பு இணைந்திருப்பதால், எஸ்டிஆர் ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.

ஜூன் 5-ந்தேதி இப்படம் ரிலீஸ் ஆகிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான முதல் சிங்கிளான ‘ஜிங்குச்சா’ பாடல் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில், படத்தின் புரோமோஷன் பணிகளில் கலந்துகொண்ட கமல்ஹாசன் பேசுகையில்,

‘எங்களை நட்சத்திர அந்தஸ்தில் தூக்கி வைத்து, எதையும் செய்ய விடாமல் தடுத்துவிட்டார்கள். சாதாரண வாழ்க்கையை இழந்தவர்கள் நாங்கள். அதனால்தான், சிலர் விசித்திரமாக நடந்து கொள்கிறார்கள். இதை மூன்று வயதிலிருந்து நானும் சிம்புவும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்’ என்றார். கமல் தெரிவித்துள்ள இந்த கருத்து, தற்போது ரசிகர்களால் வைரலாகி தெறிக்கிறது.

kamal says simbu and i have lost our average life
kamal says simbu and i have lost our average life