கமல் சார் நீங்களா இப்படி கேக்குறீங்க என ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் ஒன்றில் நிக்சன் ஒரு கார்டுக்கு மட்டும் மார்க் ஒற்றை உருவாக்கி ஏமாற்று வேலை செய்து ஜெயித்த நிலையில் அதற்கு விஜய் வர்மாவும் துணையாக இருந்தார்.
இந்த நிலையில் இது குறித்து கேட்டு நிக்சனை திணற விட்டுள்ளார் கமல்ஹாசன். அதேபோல் விஜய் வர்மாவையும் கேள்வி கேட்க ரசிகர்கள் இதை பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளனர்.
இதுவரைக்கும் நிக்சன் பண்ண தப்பு எல்லாம் நீங்க பெருசா கேட்டதே கிடையாது இது என்ன புதுசா இருக்கு என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். கடைசியில் நிக்சனை விட்டுட்டு விஜய் வர்மாவை தான் வெளுத்து விடுவார் என கூறி வருகின்றனர்.