கமல்ஹாசனின் காதலர் தின வாழ்த்து பதிவிற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

கோலிவுட் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் கமல்ஹாசன் ரசிகர்களால் அன்போடு ஆண்டவர் என்று அழைக்கப்பட்டு வருகிறார். இவர் தற்போது விக்ரம் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்திற்கான படப்பிடிப்பு பணியில் பிசியாக இருந்து வரும் நடிகர் கமல்ஹாசன் எப்போதும் சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து தனது பதிவுகளை தொடர்ந்து வெளியிட்டு வருவார். அந்த வகையில் பிப்ரவரி 14ஆம் தேதியான இன்று காதலர் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டு இருக்கும் பதிவு ரசிகர்கள் மத்தியில் அதிக லைக்குகளை குவித்து வருகிறது.

அதில் அவர், “சாதியிழிவு ஒழிந்த சமநிலைச் சமூகத்தைக் கொணர, பெருங்கருவியாய் இருப்பது காதல். காதல்தான் இவ்வுலகத் தலைமையின்பம் என்பான் பாரதி. உலகளாவிய அன்பைச் செழிக்கச் செய்ய நாமும் கொண்டாடுவோம் காதலர் தினம். என்று குறிப்பிட்டு அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.