நடிகர் கமல்ஹாசன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வெளியிட்டு இருக்கும் பதிவு வைரலாகி வருகிறது.

Kamal Haasan tweeted to wish Chief Minister M K Stalin on his birthday:

இந்திய திரையுலகில் மாபெரும் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். ரசிகர்களால் உலக நாயகன் என்று கொண்டாடப்படும் இவர் விக்ரம் திரைப்படத்தை தொடர்ந்து சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது twitter பக்கத்தில் இன்று 70 வது பிறந்த நாளை கொண்டாடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து அன்பான பதிவு ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.

அதில் அவர், முதல்வர்களில் முதன்மையானவராகவும், தமிழ்நாட்டை அடக்கியாளத் துடிப்பவர்களின் கனவைத் தகர்ப்பவராகவும் திகழும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தமிழ்நாட்டின் முதல்வர், என் மனதிற்கினிய நண்பர், தளபதி திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்தப் பிறந்தநாளில் நீடுழி வாழ வாழ்த்துகிறேன். என்று புகைப்படத்துடன் குறிப்பிட்டு பகிர்ந்திருக்கிறார்.