படம் தொடங்குவதற்கு முன்னரே பிரபல இயக்குனருக்கு சொகுசு கார் வாங்கி கொடுத்துள்ளார் நடிகர் கமல்.

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளுடன் வலம் வருபவர் உலகநாயகன் கமல்ஹாசன். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக தற்போது சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் கமல் எச் வினோத் இயக்கத்தில் நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது.

இந்த கூட்டணி உருவாவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் நடிகர் கமல் எச் வினோத் அவர்களுக்கு சொகுசு கார் ஒன்றை பரிசளித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

படம் தொடங்குவதற்கு முன்னரே இவர் சொகுசு கார் வழங்கியுள்ள இத பேச்சு தான் தற்போது கோலிவுட் சினிமாவில் ஹாட் டாபிக்காக இருந்து வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.