கல்யாணி பிரியதர்ஷன் குழந்தை பருவ புகைப்படம் வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் பல சூப்பரான படங்களில் நடித்து தற்பொழுது முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் தான் கல்யாணி பிரியதர்ஷன். இவர் மலையாளம் மற்றும் தமிழில் பல ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் பிரியதர்ஷனின் மகள் ஆவார். தமிழில் இவர் சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படத்தில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து ‘புத்தம் புது காலை’ என்கின்ற படத்திலும் நடித்திருந்தார்.

அழகு தேவதையாக இருக்கும் கல்யாணி பிரியதர்ஷன்… குழந்தையில் எப்படி இருக்காருன்னு பாருங்களேன்!.

ஆனால் கல்யாணி அதிக அளவில் ரசிகர்களுக்கு பரிச்சயமானது வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படத்தில் தான். இப்படம் சிம்புக்கு மட்டுமின்றி நடிகை கல்யாணி பிரியதர்ஷனுக்கும் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்திக் கொடுத்தது. இதன் மூலம் பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் இவரது குழந்தை பருவத்தின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அது தற்போது ரசிகர்களின் இடையே வைரலாகி வருகிறது.