விஜய் உடன் நெருக்கமாக போஸ் கொடுத்த ராஷ்மிகா திட்டியுள்ளார் பிக்பாஸ் நடிகை ஒருவர்.

Kajal Pasupathy Angry on Rashmika : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக உள்ளது. அனிருத் இசையில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

தள்ளி நில்லுடி.. விஜய் உடன் நெருக்கமாக போஸ் கொடுத்த ராஷ்மிகாவை திட்டிய பிக் பாஸ் நடிகை - வைரலாகும் பதிவு

இந்த படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக தில் ராஜு தயாரிப்பில் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழியிலும் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை வம்சி இயக்குகிறார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

தள்ளி நில்லுடி.. விஜய் உடன் நெருக்கமாக போஸ் கொடுத்த ராஷ்மிகாவை திட்டிய பிக் பாஸ் நடிகை - வைரலாகும் பதிவு

படத்திற்கு பூஜை சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. இந்த பூஜையில் ராஷ்மிகா மந்தனா விஜய் உடன் நெருக்கமாக நின்று போஸ் கொடுக்கிறார். போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையில் இந்த புகைப்படத்தை வெளியிட்டு பிக்பாஸ் நடிகையான காஜல் பசுபதி தள்ளி நில்லுடி என கோபமாக கமெண்ட்டை பதிவு செய்துள்ளார்.

இதை பார்த்து ரசிகர் ஒருவர் ஏன் என கேட்க வயிறு எரியுது என பதிலளித்துள்ளார்.